×

அரசு நிதியை தடுத்த நிதித்துறை செயலாளர் சபையில் ஆஜராக வேண்டும்: டெல்லி சபாநாயகர் அதிரடி

புதுடெல்லி: டெல்லி சட்டபேரவை கூட்டத்தில் நேற்று மதிய உணவுக்கு பின் பேசிய நிதி அமைச்சர் அதிஷி, ‘‘ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக மிக பெரிய சதி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நிதித்துறைக்கு அனுப்பப்படும் கோப்புகள் சட்டத்துறைக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த 1993ம் ஆண்டு முதல்,சட்ட பேரவையில் இருந்து அனுப்பப்படும் கோப்புகள் நிதித்துறைக்கு தான் அனுப்புவது வழக்கம். ஆனால், கோப்புகளை எங்களுக்கு அனுப்பக்கூடாது என்று கூறுகின்றனர்.

நிதித்துறைக்கு நான் பொறுப்பு வகித்த போதிலும், என்னுடைய உத்தரவுகளை நிதித்துறை அதிகாரிகள் கேட்பது இல்லை’’ என்றார். அப்போது பேசிய சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல்,‘‘பேரவைக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி கிடைக்காததால்,தீபாவளி,சாத் பண்டிகைகளை கொண்டாட முடியவில்லை. கிறிஸ்துமசையும் கொண்டாட முடியாது’’ என்றார். இதையடுத்து அரசு கொறடா திலீப் பாண்டே நிதிதுறை செயலாளரை அவையில் ஆஜராக வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டது.

The post அரசு நிதியை தடுத்த நிதித்துறை செயலாளர் சபையில் ஆஜராக வேண்டும்: டெல்லி சபாநாயகர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Finance Secretary ,House ,Delhi ,Speaker ,New Delhi ,Finance Minister ,Adishi ,Delhi Legislative Assembly ,Aam Aadmi Party government ,
× RELATED மேற்கு வங்க ஆளுநர் மாளிகை ஊழியர்கள் மீது வழக்கு..!!